பூனையை விரைவுத் தபாலில் அனுப்பிய இளைஞர்- பின்னர் நடந்த விபரீதம்!

Report

தான் வைத்துகொள்ள விரும்பாத பூனை ஒன்றை விரைவுத் தபாலில் அனுப்பி வைத்தவருக்கு தைவானில் பெருந்தொகை ஒன்று அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,

யாங் என்ற குடும்ப பெயருடைய 33 வயதான குறித்த நபர், பூனையை அட்டைப்பெட்டி ஒன்றில் வைத்துபான்சி யாவ் மாவட்டத்திலுள்ள உள்ளூர் விலங்கு மையத்திற்கு அந்த நபர் அனுப்பி வைத்தார்.

இந்த பூனைக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், விலங்குகளின் நோய் தொற்றுகளுக்கான தடுப்பு மற்றும் கட்டுப்பாடுகளை மீறியதும் கண்டறியப்பட்டுள்ளது.

இதில், தைவான் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக 60 ஆயிரம் நியூ தைவான் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று கண்டறியப்பட்டதால், 30 ஆயிரம் நியூ தைவான் டாலர் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை TAIPEI CITY GOVERNMENT ANIMAL PROTECTION OFFICE, தபால் விநியோக சேவை மற்றும் காவல்துறை கண்காணிப்பு காணொளியை வைத்து இந்த பூனையை அனுப்பியவரை நியூ தைவான் நகர விலங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆய்வு அலுவலகம் அடையாளம் கண்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள விலங்குகள் நிறுவனத்தின் இயக்குநர் சென் யுயான்-ச்சுன், உரிய நபருக்கு அறிவுரை கூறியுள்ளார்.

9413 total views