சிங்கப்பூரில் சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டுகள் சிறை!

Report

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை கற்பழித்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட குறித்த நபரான உதயகுமார் தட்சணாமூர்த்தி (31) என்பவர் சிங்கப்பூரில், தங்கி ஒரு சிறிய கடையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில்,அவர் தங்கியுள்ள குறித்த குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 12-வது சிறுமிக்கும், அவருக்கும் இடையே அதிக நெருக்கம் ஏற்பட்டுள்ளது.சிறுமி அவரிடம் அன்போடவே பழகி வந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த சிறுமியை அவர் தனிமையில் அழைத்து சென்று, ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.

பின்னர், குறித்த சிறுமியை நிர்வாண போட்டோவும் எடுத்து மிரட்டி உள்ளார். இதையடுத்து, குறித்த சம்பவம் தனது கர்ப்பிணி மனைவிக்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே பிரச்சனை முற்றியது.

இதை தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்டதின் அடிப்படையில், அவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி பங் கஞ்ச் சயூ சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார். மேலும் 12 பிரம்படி தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார்.

1322 total views