அமெரிக்கா வரலாற்றிலேயே நீண்டநாட்கள் நீடிக்கும் முடக்கம்

Report

அமெரிக்க அரசுத்துறைகளின் முடக்கம், அந்நாட்டின் வரலாற்றிலேயே நீண்டநாட்கள் நீடிக்கும் முடக்கம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

மெக்சிக்கோ எல்லையில் பாதுகாப்புச் சுவர் எழுப்ப 5.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக அதிபர் டிரம்புக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் அமெரிக்க அரசுத்துறைகளின் செலவினங்களுக்கு நிதி ஒதுக்கும் மசோதாவும் நிறைவேறவில்லை. பல்வேறு அரசுத் துறைகள் முடங்கி 8 லட்சம் ஊழியர்கள் ஊதியமின்றி பணியாற்றவோ கட்டாய விடுப்பில் செல்லும் நிலையோ ஏற்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் இந்த முடக்கம் 21 நாட்களை தாண்டியுள்ளது. பில் கிளிண்டன் ஆட்சிக் காலத்தில் 1995-1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் 21 நாட்களுக்கு அரசுத்துறைகள் முடங்கியிருந்தன. அதைவிட அதிகமான நாட்களையும் தாண்டி தற்போதைய அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கிறது.

1121 total views