சவூதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி பெண்கள் அரை நிர்வாண போராட்டம்

Report

சவூதி பெண்ணுக்கு அடைக்கலம் தரக்கோரி அவுஸ்ரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

சவூதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறினார்.

குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொக் வழியாக அவுஸ்ரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர்.

சவூதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு மறுத்த ரஹப் அவுஸ்ரேலிய அரசு தனக்கு அடைக்கலம் தர வேண்டும் என பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தார். இதனால் குறித்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் சீக்ரட் சிஸ்டர் கூட் அமைப்பை சேர்ந்த 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். ரஹப் முகமது அல்கியூனன் அவுஸ்திரேலியாவில் தங்க அடைக்கலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

குறித்த போராட்டம் சிட்னியில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் முன்பு நடைபெற்றது. குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே அவுஸ்ரேலிய வெளிவிவாகர அமைச்சர் மரிஸ் பேனே தாய்லாந்து தலைநகர் பாங்கொங் சென்றார். அவர் அந்நாட்டு வெளிவிவாகர அமைச்சரை சந்தித்து பேசினார். அப்போது சவூதி அரேபிய பெண்ணுக்கு அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக ரஹப் முகமதுவுக்கு அவுஸ்திரேலிய அரசு அடைக்கலம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2797 total views