தைவானுக்கு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு சீனா எதிர்ப்பு

Report

தைவானுக்கு நீர்மூழ்கி தொழில் நுட்பங்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கக்கூடாது என சீனா கூறியுள்ளது.நீர்மூழ்கி கப்பல் சார்ந்த தொழில்நுட்பங்களை தைவானுக்கு வழங்க இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்க முன்வந்துள்ளன. இது குறித்து அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்த நாடுகள், சீனாவின் கொள்கையை புரிந்து கொள்ள வேண்டும். தைவானுடன் ராணுவ உறவை ஏற்படுத்த கூடாது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். இதில் சீனாவின் நிலை தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளது. அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகள், இதனை அங்கீகரிப்பதுடன், இந்த விவகாரத்தில் உள்ள ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும். தைவான் தொடர்பான விவகாரத்தில், மற்ற நாடுகள் விவேகமாகவும், முறையாகவும் செயல்பட வேண்டும். இதன் மூலம், சீனாவுடனான உறவை பாதிக்காமல் இருப்பதுடன், தைவான் பகுதியில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.

1331 total views