ஆப்கனில் குண்டுவெடிப்பு: இந்தியர் பலி

Report

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள், கட்டடங்கள் அமைந்த பகுதியில் குண்டுவெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

100 பேர் காயமடைந்தனர். தலிபான் பயங்கரவாத அமைப்பினர் இதற்கு பொறுப்பேற்றுள்ளனர்.இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். உயிரிழந்த இந்தியரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர இந்திய தூதரகம் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

955 total views