மிராஜ் 2000D விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்பு!!

Report

ஜூரா மலைத்தொடர்களில் காணாமல் போயிருந்த Mirage 2000D விமானத்தின் கருப்பு பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளது.

கடந்த வார புதன்கிழமை காலை இரு அதிகாரிகளுடன் பயணித்த Mirage 2000D போர் விமானம் சில நிமிடங்களில் ரேடார் கண்காணிப்பில் இருந்து விலகி, தொடர்பற்று போனது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளாகி, இதில் விமானத்தில் பயணித்த இரு அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் விமானம் விபத்துக்குள்ளான காரணம் குறித்து அறிய முடியாமல் இருந்த நிலையில், விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது.

Metz மாவட்ட அரச அதிகாரி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். <<வெள்ளிக்கிழமை நாள் முடிவில் விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன>> என அவர் குறிப்பிட்டார்.

மேலதிக சோதனைகளுக்காக ஆயுதப்படைகளின் பணிப்பாளர் நாயகத்தின் அலுவலகத்துக்கு கறுப்பு பெட்டி அனுப்பப்பட்டுள்ளமையும்

3050 total views