உலக வங்கியின் தலைவராகின்றார் டொனால்ட் டிரம்பின் மகள்?

Report

உலக வங்கியின் தலைவர் பதவிக்கு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து வரும் பத்திரிக்கை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த செய்திக்கு வெள்ளை மாளிகை மறுப்பு வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம் முன்கூட்டியே பதவி விலகுவதால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் அவரின் பதவி காலம் நிறைவடைகிறது.

இந்நிலையிலேயே, உலக வங்கியின் தலைவர் பதவிக்கு வருவதறக்கு இவாங்கா டிரம்ப் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இதுபோன்ற செய்திகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்புத் துறையின் துணை இயக்குனர் ஜெசிக்கா டிட்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலக வங்கியில் 189 நாடுகள் அங்கத்தினராக உள்ள நிலையில், அமெரிக்க அரசின் ஒப்புதலை பெற்ற நபர்கள் மட்டுமே தலைவர் பதவியில் அமர முடியும்.

இந்நிலையில், உலக வங்கியின் அடுத்த தலைவராக முன்மொழியும் பெயர்களை உறுப்பு நாடுகள் எதிர்வரும் ஏழாம் திகதி முதல் மார்ச் 14ம் திகதிக்குள் பரிந்துரைக்க வேண்டும்.

இதனை தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் நடைபெறும் உலக வங்கியின் செயல் இயக்குனர்கள் கூட்டத்தில் புதிய தலைவர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

1297 total views