காதலனை கரம் பிடித்த ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மகள்!

Report

ஹாலிவுட் நடிகரும், திரைப்பட இயக்குனருமான அர்னால்டு மகள் கேதரின், ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட் என்பவரை கரம் பிடிக்க உள்ளார்.

குறித்த ஹாலிவுட் நடிகரான அர்னால்டு , திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல்வேறு பதவிகளை கொண்டவர் .

இவருடைய மகள் கேதரின் (வயது 29). எழுத்தாளரான இவர், ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட்டை (39) கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்தார்.

இந்நிலையில், இவர்களின் காதல் திருமணத்தில் முடிய உள்ளது.இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளம் ஒன்றில்பதிவிட்டு கிறிஸ் பிராட் கூறியுள்ளார்.

அதில் அவர், இனிமையான கேதரின், உன்னை மணந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னுடன் வாழப்போவதில் பெருமை அடைகிறேன். நாம் நமது வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கலாம் எஎன்றார்.

இந்த கிறிஸ் பிராட் ஏற்கனவே நடிகை அன்னா பாரிசை காதலித்து மணந்து, அந்த ஜோடிக்கு ஜேக் என்று 7 வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிறிஸ் பிராட், அன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2416 total views