மோசமான நடத்தையால் நாடு கடத்தப்படும் பிரித்தானிய குடும்பம்!

Report

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய குடும்பம் ஒன்று மோசமான நடத்தை காரணமாக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளனர்.

குறித்த நபர்கள் மீது, பொது இடத்தில் குப்பை போட்டமை, உணவு உண்டதன் பின்னர் உணவகத்தில் பணம் செலுத்தாமை, திருட்டு ஆகிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆக்லந்து நகர மேயர் ஃபில் கொஃப் (Phil Goff) பொலிஸாரிடம் கோரியிருந்தார்.

இந்த நிலையில், பண்புகள் தொடர்பான விவகாரத்தினை மீறிய குறித்த பிரித்தானிய குடும்பத்தினை நாடு கடத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் குடிநுழைவுத் துறை உதவித் தலைமை நிர்வாகி பீட்டர் டெவோய் (Peter Devoy) குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, குறித்த பிரித்தானிய குடும்பத்தினர் இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

7753 total views