பணியை முடிக்காத ஊழியர்களை நாய் போல நடத்திய சீன நிறுவனம்: காணொளி!

Report

சீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை நாய் போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கியுள்ள காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

குறித்த சம்பவத்தில், ஒரு சீன நிறுவனம் டார்கெட் முடிக்காத தங்கள் ஊழியர்களை "நாய்" போல சாலையில் நடந்து செல்லுமாறு தண்டனை வழங்கி உள்ளது.

இந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைராலாகி வருகிறது. இந்த காணொளியை சீன ஷான்டோங்க்கு சொந்தமானது.

இந்த காணொளியில், இலக்கை அடையாத அவர்களை சாலையில் முட்டிபோட்டு, கைகளை கீழே வைத்து சுற்றி வர சொல்லி நடந்து செல்கின்றனர்.

பொலிஸார் வரும்வரை, இந்த தண்டனை தொடர்ந்தது. பின்னர் சிறிது நேரம் மட்டும், அந்த நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் வழக்கம் போல இயங்கியது.

இது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால், அவர் வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஒரு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

https://www.facebook.com/scmp/videos/458448701355906/

இதற்கு முன்பும் இதேபோன்ற வெளிவந்த ஒரு காணொளியில், ஒரு பெண் ஊழியரின், வேலை சரியாக செய்யாத ஊழியர்களை வரிசையாக நிற்க வைத்து, அனைவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

7422 total views