97-வயதான பிரித்தானிய இளவரசர் பிலிப் திடீர் முடிவு!

Report

இங்கிலாந்து இளவரசர் பிலிப் (97 வயது) கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியமைக்காக தனது டிரைவிங் லைசென்சை சரண்டர் செய்துள்ளார்.

குறித்த சம்பவத்தில்,இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச் சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. மேலும் இந்த விபத்தில் அவரது தோழியும் காயம் அடைந்தார்.

இந்நிலையில், இளவரசர் பிலிப் நேற்று தனது டிரைவிங் லைசென்சை காவல் நிலையத்தில் திருப்பி அளித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மணை, இளவரசர் பிலிப் தானாக முன்வந்து தன்னுடைய ஓட்டுநர் உரிமத்தை விட்டுக் கொடுக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கார் விபத்து நடந்தவுடன் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

9724 total views