குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றிய பொலிஸார்! பின்னர் நடந்த விபரீதம்!

Report

இந்தோனேசியாவில் குற்றவாளி ஒருவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், பொலிஸார் கழுத்தில் பாம்பினைச் சுற்றி சித்ரவதை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவத்தில், இந்தோனேசியாவில் செல்போன் திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் வாலிபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான, விசாரணையின் போது குற்றவாளி தன் குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்ததால் மலைப்பாம்பு ஒன்றினை அவன் கழுத்தில் போட்டு சுற்றி சித்ரவதை செய்துள்ளனர்.

இதன் காணொளி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாக பரவியது.

இதையடுத்து, குறித்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளமபி வந்த நிலையில், இதற்கு ஜெய விஜயா தலைமை காவல் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும், குறித்த பாம்பு விஷமற்றது ஆகையால் குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை.

இருப்பினும், இந்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்றும் குறித்த அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

6524 total views