பிரிட்டனில் ஓர் ஆச்சரியம்; 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்!

Report

பிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தின் மூலம் ரோபோட் கலைஞர் ஒருவர், மனித அமைப்பை அப்படியே கொண்டு ரோபோட்டை உருவாக்குகின்றார்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது.

இந்நிலையில், மனித வடிவமைப்பில் இருந்து சற்றும் மாறாத வகையில் பெண் ரோபோட் ஒன்று உருவாக்கப்படுகிறது. குறித்த, பெண் ரோபோட்டிற்கு ஐடா என பெயரிடப்பட்டுள்ளது.

இதனை பிரிட்டனைச் சேர்ந்த ஐடென் மெல்லர் அல்ட்ரா ரியலிஸ்டிக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கி வருகின்றார்.

இதன் நுணுக்கமான முக பாகங்கள், புருவங்களின் முடி போன்றவற்றை தன் கைகளால் கலை நயத்துடன் செய்து வருகிறார்.

இதுதொடர்பாக ஐடென் மெல்லர் கூறுகையில், கணினியில் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படுவதன் மூலம், மனிதர்களின் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளவும், மனிதர்களை போல் மிமிக்கிரி செய்யவும் முடியும்.

இந்த ரோபோட்டினை மனிதர்களுக்கு இணையான வகையில் உருவாக்குவதே எங்கள் நோக்கம் என்றார்.

மெஸ்மர் எனும் ரோபோட் தொழில்நுட்பத்தினை கொண்டு ஐடாவின் தலைப்பகுதி, சிலிகான் தோல் மற்றும் 3டி பிரிண்டிங் செய்யப்பட்ட பற்கள் போன்றவற்றை உருவாக்குகின்றனர்.

குறித்த ரோபோட் , இந்த ஆண்டு மே மாதம் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இதன் புகைப்படங்கள் நவம்பர் மாதம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

510 total views