மெக்சிகோ விமானம் நொறுங்கியதில் 2-பேர் உடல் கருகி உயிரிழப்பு!

Report

மெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

குறித்த சம்பவத்தில், மெக்சிகோவில் அதிசாபன் டி ஸரகோசா நகரில் தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் ஒன்று ர் செயல்பட்டு வருகிறது.

இது,மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

குறித்த, பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக நேற்று காலை புறப்பட்டு சென்றது.

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.

இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

இருப்பினும், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

888 total views