ஏலத்தில் விலைக்கு போகாத ஹிட்லர் வரைந்த ஓவியம்!

Report

ஜெர்மனியில் சர்வாதிகாரியாக விளங்கிய அடால்ஃப் ஹிட்லரின் 5 ஓவியங்கள் அண்மையில் ஏலத்தில் விலைபோகாத சம்பவம் நடந்தது.

ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட யாரும் ஏலம் எடுக்க வராதது ஏல நிறுனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கியவரும், யூத மக்களைக் கூட்டமாக அழித்து இனப்படுகொலை நிகழ்த்தியவருமான அடால்ஃப் ஹிட்லர் ஓவியம் வரைவதிலும் வல்லவராக இருந்தவர்.

முதல் உலகப் போருக்கு முன்னர் வரை வறுமைப் பிடியில் இருந்த ஹிட்லர், சுமார் 2,000 அதிகமான ஓவியங்கள் வரை வரைந்தார்.

இந்நிலையில், அவ்வப்போது ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும்.

அந்த வகையில் ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் 5 ஓவியங்கள் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ஹிட்லர் வரைந்த அந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.11 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

பல நாள்கள் கடந்தும் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை. இது ஏல நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாக இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதத்தில் நம்பகத்தன்மை அடிப்படையில் ஹிட்லரின் மூன்று ஓவியங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1371 total views