ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டு மீண்டும் கருப்பைக்குள் வைக்கப்பட்ட குழந்தை! கடைசி நிமிடங்கள்

Report

இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தாயின் வயிற்றில் இருந்து ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் தாயின் கருவறைக்கே பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

குறித்த சம்பவத்தில், இங்கிலாந்தைச் சேர்ந்த 26 வயதான செவிலியர் பீதன் சிம்சன் திருமணத்துக்குப் பிறகு, கர்ப்பம் தரித்தார்.

20 வாரங்கள் கழித்த பிறகு வழக்கமான ஸ்கேன் பரிசோதனையைச் செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் சிம்சனுக்கும் அவரின் கணவர் கியரோனுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது.

கருவில் இருந்த குழந்தையின் தலை சரியான அளவில் இல்லை என்றும் அதற்குக் காரணம் குழந்தையின் முதுகுத் தண்டுவடம் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதே நிலையில், குழந்தை பிறந்தால் குழந்தை நடக்க முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் குழந்தை பிறப்பதற்கு முன்னரே தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்து 'ஃபீட்டல் சர்ஜரி' (Fetal surgery) செய்யும் வழிமுறையை சிம்சன் தேர்ந்தெடுத்தனர்.

இதின் சவாலான முயற்சியில், பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இறங்கினர்.

அவர்கள் தாயின் வயிற்றில் இருந்து 24 வாரங்களில் அந்தப் பெண் குழந்தையை வெளியே எடுத்து, முதுகுத் தண்டுவடத்தைச் சீரமைக்கும் அறுவைசிகிச்சையை செய்து, மீதமுள்ள கர்ப்ப காலத்தைத் தொடரும் வகையில் தாயின் கர்ப்பப்பையில் குழந்தையை பத்திரமாக வைத்து விட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்சன், உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையைச் செய்தனர்.

நாங்கள் அனைவரும் இறுதியில் வெற்றிபெற்றுவிட்டோம். நம்பமுடியாத வகையில் அந்த அறுவை சிகிச்சையை என் மகள் எதிர்கொண்டாள்.

சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் வயிற்றுக்குள் வைத்த பின்னரும் அவள் நலமுடன் இருப்பதாக' மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.

வயிற்றில் உதைப்பது மட்டும் இப்போதும் மாறவே இல்லை. வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதால், அவள் எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்று பூரிக்கிறார் சிம்சன்.

9107 total views