சிறுவனுக்கு அமெரிக்காவில் கிடைத்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் பட்டம்!

Report

அமெரிக்காவில் நடந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட தமிழக சிறுவன் லிடியன் நாதஸ்வரம் தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த தி வேல்ட்ஸ் பெஸ்ட் ( The World's Best) என்ற ரியாலிட்டி ஷோவில் தமிழக சிறுவன் 'லிடியன் நாதஸ்வரம்' கலந்து கொண்டார்.

இதில், பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் பல சாதனைகளை செய்தார் 13 வயது சிறுவன் லிடியன். மொத்தத்தில், தன்னுடைய அசாத்திய திறமையால் பியானோவை வாசித்து உலக அரங்கையே அதிரச் செய்தார்.

1900 ம் ஆண்டில் ரஷ்யன் இசைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட பிளைட் ஆப் பம்பிள்பி (Flight of the Bumblebee) என்ற இசையை சராசரியாக வாசிக்கும் நேரத்தை விட இரண்டு மடங்கு வேகத்தில் வாசித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார் லிடியன்.

இதனைப்பார்த்து, வியந்த ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தான் பார்த்த இசை நிகழ்ச்சிகளில் இதுதான் சிறந்தது ட்வீட் செய்ய அந்த காணொளி தற்போது உலகம் முழுவதும் பரவியது.

இதில், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் சிறுவன் லிடியனுக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்தனர். மேலும் இசை உலகை உலகுக்கு உணர்த்திய தமிழக சிறுவனை நடிகர்கள் சூர்யா, மாதவன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஒரு கையால் மிஷன் இம்பாசிபில் தீம் மியூசிக் வாசித்துக்கொண்டே மறு கையால் ஹாரிபாட்டர் தீம் மியூ சிக்கை வாசிப்பது, கண்களை கட்டிக்கொண்டு பியோனா இசை, கைகளை பின்பக்கமாக திருப்பியே பியோனா வாசிப்பது என்று லிடியனின் சாகசங்கள் தி வேல்ட்ஸ் பெஸ்ட் நிகழ்ச்சியை அலங்கரித்தது.

இந்நிலையில், கடைசி சுற்றுவரை சென்ற லிடியன், தி வேல்ட்ஸ் பெஸ்ட் என்ற பட்டத்தை தட்டிச்சென்றார். பட்டத்துடன் அவருக்கு பரிசாக ரூ.7 கோடி ரொக்கமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

5129 total views