நியூசிலாந்தில் மசூதி அருகே துப்பாக்கிச் சூடு - பொதுமக்கள் 6 பேர் சுட்டுக் கொலை!

Report

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டாவது மசூதி அருகே மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் முதல் கட்டத் தகவலில் 6 பேர் உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே உள்ள மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதியில் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார்.

இந்நிலையில், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஏராளமானோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியை விரைந்து வந்த பொலிஸார் சுற்றி வளைத்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் உள்ளூர் செய்திகள் உறுதி செய்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு நடந்த மசூதிக்கு தொழுகைக்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் செல்ல முயன்றபோது, இந்தத் தாக்குதல் நடந்தது.

அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1330 total views