போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் நிறுத்தம் -விமான நிறுவனம் அதிரடி!

Report

போயிங் விமானங்களுக்கு பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ள நிலையில், போயிங் மேக்ஸ் 737 விமான விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து போயிங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், விநியோகம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், போயிங் விமானங்களை உற்பத்தி செய்யும் பணிகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர்.

இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

இதன் காரணமாக, குறித்த விமான சேவைக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. .

மேலும், சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

2175 total views