நியூசிலாந்தின் மசூதி ஆஸ்திரேலியா பயங்கரவாதி துப்பாக்கி சூடு - நாட்டின் கறுப்பு நாள் என நியூசிலாந்து பிரதமர் கண்டனம்!

Report

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்கள் 49-பேரை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில், நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் இன்று தொழுகை நடைபெற்றது.அப்போது, அங்கு புகுந்த மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில், 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள், பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் இருந்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யப்பட்டன.

இதில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை பொலிஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளன.

துப்பாக்கி சூடு தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறியதாவது:-

நியூசிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூசிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூசிலாந்து சமூகத்தில் இடமில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

2185 total views