மொசாம்பிக்கில் பாரிய நிலச்சரிவு

Report

மொசாம்பிக் நாட்டில் ஏற்பட்ட சூறாவளியினால் பாரியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மொசாம்பிக்கில் நேற்று மாலை 224 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியில் குறைந்தது 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய உள்ளனர். இதேவேளை மின்சாரம் முழுமையாக செயல் இழந்துள்ளது என ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மொசாம்பிக் நாட்டில் கடந்த வாரம் நிலவிய வெள்ளத்தினால் 66 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரம் பேர் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் மீண்டும் சூறாவளி தாக்கியுள்ளது.

மொசாம்பிக்கில் 2000 ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 350 பேர் உயிரிழந்த நிலையில் சுமார் 65௦ ௦௦௦ பேர் தமது வாழ்விடங்களை இழந்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் சுமார் 3 தசாப்தகால இடைவெளியின் பின்னர் மீண்டும் மொசாம்பிக்கில் இயற்கை அனர்த்தம் கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1341 total views