அமெரிக்கா தனது அறிய வாய்ப்பை நழுவ விட்டது - வடகொரியா மீது கடும் குற்றச்சாட்டு!

Report

வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா தனது அறிய வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டது என்று வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி, அயல்நாட்டு பத்திரிகையாளருடன் தலைநகர் பியாங்யாங்கில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டது என கூறினார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், 15 மாதங்களாக ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை நிறுத்திவைத்திருப்பதற்கு கைமாறாக வடகொரியாவுக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்காத வரையில் சமரசத்துக்கோ அல்லது புதிய பேச்சுவார்த்தைக்கோ வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் சமீபத்தில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

குறித்த பேச்சுவார்த்தையின் காரணமாக, இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

1759 total views