பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- பீதியில் மக்கள்!

Report

பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

குறித்த நிலநடுக்கம் தெற்கு பிலிப்பைன்சின் சாரங்கனி மாகாணத்தில் இன்று காலை 7.07 மணியளவில் உணரப்பட்டுள்ளது.

அலபேல் நகரில் இருந்து 10 கிமீ வடகிழக்கே கடலுக்கடியில் 96 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக பதிவாகியிருந்ததாகவும், பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் பூகம்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் லேசாக குலுங்கின. இருப்பினும், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என நிலநடுக்கம் பற்றிய அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் அதிவானது அலபேல் நகருக்கு அருகில் உள்ள கோரோநடால், ஜெனரல் சான்டோஸ், தெற்கு கோட்டபாட்டோ, தவாவ், டாகுராங், சுல்தான் குதரத், கிதாபவன் மற்றும் ககயான் தி ஓரோ ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

1070 total views