துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் - நியூசிலாந்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடனடியாக வெளியேறினர்!

Report

நியூசிலாந்திலிருந்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள் வெளியேறியுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தக ஆதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கொலையாளி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நியூசிலாந்து சென்றிருந்த பங்களாதேஷ் வீரர்கள் குறித்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பங்களாதேஷ் கிரிக்கட் வீரர்கள் இன்று (சனிக்கிழமை) பாதுகாப்பாக வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவர்கள் தமது நாட்டைச் சென்றடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் நிலவும் அசாதாரண சூழலால் இன்று அந்நாட்டில் தொடங்கவிருந்த பங்களாதேஷ் டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1265 total views