நியுசிலாந்தில் உள்ள மருத்துவமனை மூடப்பட்டதால் பதற்றம்

Report

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியுசிலாந்தில் உள்ள மருத்துவமனை மூடப்பட்டதால் பதற்றம் நிலவியது. நியுசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தனர்.

இந்த கோரச் சம்பவம் நடந்த மறுநாளான இன்று, ஹாக்ஸ் பே ((Hawke’s Bay)) என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை அடுத்து மருத்துவமனை உடனடியாக மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

ஊழியர்கள், நோயாளிகள், பார்வையாளர்கள் அனைவரும் உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் மருத்துவமனை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியது.

1342 total views