ஆப்கானிஸ்தானிய பாடகிக்கு தலிபான்கள் கொலை மிரட்டல்

Report

ஆப்கானிஸ்தானின் பிரபல பாடகி, கொலை மிரட்டலுக்கு நடுவே தாயகத்தில் கச்சேரி நிகழ்த்த வந்துள்ளார்.

காபூலில் பிறந்த 34 வயதான அரியானா, 8 வயதில் குடும்பத்துடன் லண்டனில் அகதியாக தஞ்சமடைந்தார். பாடகியாக உருவெடுத்த அவர், ஆப்கானிஸ்தானிய இசையுடன் பாப் இசையை கலந்து கச்சேரி செய்து வருகிறார். ஆனால் அவர் மேடையில் பாட ஆப்கானிஸ்தானிய மதக்குருக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரை ஆப்கானிஸ்தானுக்கு வந்தால் கொல்லப்படுவார் என்று தலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் இசைச் கச்சேரிக்கா அர்யானா சையத் மீண்டும் காபூலுக்கு வந்துள்ளார். கொலை மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்றும், ஆப்கானிஸ்தானிய இசையின் மகத்துவத்தை உலகறிய செய்வதே தமது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

1401 total views