இந்தோனேசியாவில் மக்களை அச்சுறுத்தும் கடும் மழை! 42 பேர் பரிதாப பலி

Report

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கன மழையில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியில் மக்களை அச்சுறுத்தும் கனமழை பெய்தது.

வெள்ளத்தில் சிக்கிய 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது மழை கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்னும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் சுவாவேசித் தீவில் மழை மற்றும் நிலச்சரிவால் 70 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் வழக்கமாக அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் மழைக்காலமாகும். இதனால் வழக்கத்திற்கு மாறான கனமழை பெய்தது என்று கூற இயலாது.

830 total views