நியூசிலாந்து தாக்குதல் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!மனதை உருக்கும் ஆவேசம்

Report

குறித்த நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 49 பேருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ரொறன்ரோ நதன் ஃபிலிப் சதுக்கப் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த கனேடிய அகதிகள் மற்றும் குடியுரிமைகள் விவகார அமைச்சர் அஹ்மட் ஹூசைன், மசூதிகளில், அமைதிக்கான, தியானத்திற்கான, வழிபாட்டுக்கான இடத்தில், அப்பாவி மக்கள் மத நம்பிக்கையின் பெயரால் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறான கொடிய சம்பவம் கனடாவிலோ, உலகின் வேறெந்த நாட்டிலோ நடைபெறுவதை நாம் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நியூசிலாந்தில் இடம்பெற்ற இந்த கொடிய தாக்குதல் சம்பவம், ரொறன்ரோவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தை நடுநடுங்க வைத்துள்ளது.

முஸ்லிம் சமூகத்துடன் நாம் அனைவரும் துணை நிற்கின்றோம் என்பதனை வெளிக்காட்டவே நாம் அனைவரும் ரொறன்ரோவில் கூடினோம்.

அவர்களுக்கு எமது ஆதரவு எப்போதும் உண்டு என ரொறன்ரோ நகரின் துணை நகரபிதா டான்சில் மினன் வோங் தெரிவித்துள்ளார்.

1085 total views