பிரெக்ஸிற் விவகாரம்: முறையான சமரசம் மேற்கொள்ள பிரதமர் தெரேசா கோரிக்கை!

Report

பிரெக்ஸிற் உடன்படிக்கை 2-வது முறையாக தோல்வியடைந்துள்ள நிலையில் முறையான சமரசம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் தெரேசா-மே நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரியுள்ளார்.

ஒப்பந்தத்தை ஆதரிப்பதில் தோல்வி என்பது, நாம் ஐரோப்பிய ஒன்றியத்தை கைவிடுவோம் என்பதல்ல வென பிரதமர்-மே தெரிவித்ததாக சன்டே டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 29-ல் பிரெக்ஸிற் இடம் பெறும் என தெரிவித்துள்ள நிலையில், தோல்வியடைந்துள்ள பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை எதிர்வரும் வாரம் மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவதற்கு பிரதமர் மே எதிர்பார்த்துள்ளார்.

இந்நிலையில், ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்வது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, எதிர்க்கட்சி தலைவர் ஜெரிமி கோர்பின் பிரெக்ஸிற் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3889 total views