குழிக்குள் மாட்டிக்கொண்ட நாயும், ஆமையும் பத்திரமாக மீட்பு

Report

அமெரிக்காவில் ஒரு சிறிய குழிக்குள் மாட்டிக்கொண்ட நாய் மற்றும் ஆமை இரண்டும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் விளையாட்டு பூங்கா ஓன்று உள்ளது. இந்த விளையாட்டுப் பூங்காவில் ஒரு பெரிய ஆமை ஒன்று சுவரோரம் இருந்த குழியின் அருகே நடந்து சென்றது. அப்போது அங்கு வந்த நாய் ஒண்டு அந்த ஆமையை கண்டது. இதனையடுத்து நாய் விளையாடும் நோக்கத்துடன் சுவரோரம் இருந்த ஆமையின் பக்கத்தில் சென்று அதன் அருகே இருந்த சிறிய குழிக்குள் சென்று மாட்டிக் கொண்டது. இதனால் இரண்டுமே குழிக்குள் இருந்து வெளியே வர முடியாமல் போராடியது.

இதனையடுத்து நாயும் ஆமையும் மாட்டிக்கொண்டதை கண்ட அப்பகுதியினர் உடனே தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மாட்டிக்கொண்ட சுவற்றின் மறுபுறம் ஒரு துளையிட்டு நாயையும், ஆமையையும் பத்திரமாக மீட்டனர்.

950 total views