இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு!

Report

இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிண்டு 80 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகின்றது.

தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், 150 இற்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அண்மைக்காலமாகவே இந்தோனேசியாவில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

830 total views