துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடம்!

Report

நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களில் மேலும், ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம், வழிபாட்டாளர்கள் நிறைந்த நியூசிலாந்தின் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் படுகாயமடைந்தனர்.

இதில்,காயமடைந்தவர்களுள் 30 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒன்பது பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளன.

தாக்குதலில் காயமடைந்த 4 வயது குழந்தை ஆபத்தான நிலையில், ஒக்லாந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல் இடம்பெற்ற தினம் நாட்டின் இருண்ட நாட்களில் ஒன்று என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

3811 total views