செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்த பாரிஸ்!

Report

மிகவும் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் ஹொங்கொங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களுடன் பாரிஸ் நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் 133 நகரங்களின் விலைகளுடன் ஒப்பிடப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முப்பது ஆண்டுகால வரலாற்றில் மூன்று நகரங்கள் இவ்வாறு முதலிடத்தை பகிர்ந்துக் கொண்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

பிரான்ஸ் தலைநகர் கடந்த ஆண்டு மிகவும் செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் காணப்பட்டது.

செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் நான்கு ஐரோப்பிய நகரங்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

7657 total views