சர்ச்சைக்குரிய கருத்தால் சிறுவனிடம் முட்டையால் அடி வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்!

Report

நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை முட்டையால் சிறுவன் அடித்த சம்பவம் நடந்துள்ளது.

நியூஸிலாந்து தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினரை சிறுவன் முட்டையால் அடித்த சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு குறித்து ஆஸ்திரேலிய வலதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் பிரேசர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசும்போது, முஸ்லிம்களை நியூஸிலாந்தில் அனுமதித்ததால்தான் கடுமையான சூழலைச் சந்தித்திருக்கிறது என்ற தொனியில் சர்ச்சையான கருத்தைப் பதிவு செய்தார்.

அவர், இந்தக் கருத்தைச் சொன்னதும் அருகில் இருந்த 17-வயது சிறுவன் கையிலிருந்த முட்டையால் அவர் தலையில் அடித்தார். இதனைச் சற்றும் எதிர்பாராத பிரேசர் சிறுவனைத் தாக்கினார்.

இந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

1263 total views