பிரெக்ஸிற் மற்றும் பிரித்தானியாவின் நகர்விற்கு பாராட்டு கூறிய ஜப்பான்!

Report

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்ப்பதற்கு பிரித்தானியா முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை ஜப்பான் வரவேற்றுள்ளது.

ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளி விவகார அமைச்சர் ஜெரமி ஹண்ட், அந்நாட்டு பிரதமர் ஸின்ஸோ அபேயை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்தார். இதன்போது, பிரெக்ஸிற் தொடர்பாகவும் கவனஞ் செலுத்தப்பட்டது.

ஹண்ட் இதன்போது, உடன்பாடற்ற பிரெக்ஸிற்றினால் ஏற்படும் பாதக விளைவுகளை தவிர்ப்பதற்காகவே பிரித்தானியா செயற்படுவதாக குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துமாறு டொயொட்டா உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனமான டொயொட்டா அதன் உற்பத்திகளை தொடர்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவுக்கு தடையின்றி – வரியின்றி மேற்கொள்வதை ஹண்ட் உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக நீண்டகால வர்த்தக மற்றும் முதலீட்டு உறவை ஜப்பான் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1935 total views