சர்வதேச ரீதியில் பல நாடுகளில் பேஸ்புக்கிற்கு ஏற்பட்ட சிக்கல்!! தற்போதைய நிலை..

Report

பேஸ்புக் பயன்பாட்டில் நேற்றைய தினம் சர்வதேச ரீதியில் பல நாடுகளில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலைமை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் பெரும்பாலான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்ராகிராம் சமூகவலைதள பயன்பாட்டில் நேற்றைய தினம் சிக்கல் நிலைமையை பயனாளர்கள் எதிர்கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக பேஸ்புக் பயனாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்திற்குள் உலகெங்கும், ஆயிரக்கணக்கான பேஸ்புக் பயனாளர்கள் வளைதள பாவனையில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த நிலைமை சீராக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்பட்ட தடங்கல் குறித்து மன்னிப்பு கோருவதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவத்துள்ளது.

சமூக வளைபின்னல் இணையதளத்தின் தகவலின்படி, நாளாந்தம் 1.52 பில்லியன் பயனாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1835 total views