சவுதியில் நைஜீரிய பெண்ணுக்கு மரண தண்டனை - எழுந்துள்ள கண்டனம்

Report

போதைவஸ்து தொடர்பாக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நைஜீரிய பெண் தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், நைஜீரிய அரசாங்கமும் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரானவரும் கணவரை இழந்தவருமான பெண், போதை வஸ்தினை சவுதி அரேபியாவிற்குள் கொண்டு செல்ல முற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் 20 நைஜீரியர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என தெரிவித்து மரண தண்டனை வழங்கப்பட்டு சவுதி அரேபியாவில் சிறையடைக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய வெளிவிவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக நைஜீரிய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் சவுதி அரேபிய நிர்வாகத்துடன் ராஜதந்திர தொடர்பினை ஏற்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், சவுதி அரேபியாவில் மரண தண்டனை விசாரணைகள் ரகசியமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படுவதனால், தண்டனை பெறுபவர்களை விடுவிப்பது மிகவும் கடினம் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

1480 total views