இலங்கையில் 13 கோடி பேர் பலி? அமெரிக்க அதிபரின் ட்விட்டால் பெரும் சர்ச்சை

Report

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட் செய்திருந்தார். அவரது பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் பல்வேறு இடங்களில் இன்று குண்டுவெடிப்பு நடந்தது. கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் கொண்டாட்டத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதனை நடத்தியது யார் என்பது உறுதி செய்யப்படவில்லை.

இலங்கை சம்பவத்தை உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.


அவர் தனது ட்விட்டர் பதிவில் 138 பேர் என்பதற்கு பதிலாக 138 மில்லியன் (13.8 கோடி) என்று குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பதிவை சரி செய்யும்படி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரிட்வீட் செய்திருந்தனர்.

இதையடுத்து தனது பதிவை ட்ரம்ப் திருத்திக் கொண்டார். குண்டுவெடிப்பு சம்பவத்தால் இலங்கையில் பெரும் பதற்றம் காணப்படுகிறது.

உறுதிபடுத்தப்படாத தகவல்களை பகிர்ந்து பீதியை கிளப்ப வேண்டாம் என்று அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

33313 total views