அமெரிக்க நடுவானில் இரு விமானங்கள் விபத்து!!

Report

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதோடு, 3 பேர் குறித்து தகவல் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் 12 பேர் இருந்தனர் என்றும் மற்றொரு விமானத்தில் 5 பேர் இருந்தனரென்றும் கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Seaplane எனப்படும் சிறு விமானங்கள் தரை, கடல் இரண்டிலிருந்தும் மேலெழக்கூடியவை இரண்டிலும் தரையிறங்கக்கூடியவை.

சுற்றுலாப் பயணிகளை அருகிலுள்ள சுற்றுலாத் தளங்களுக்கு அந்த வகை விமானங்கள் மூலம் அழைத்துச் செல்வதை சில கரையோரக் கேளிக்கை விடுதிகள் வழக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3453 total views