சீனாவில் விக்கி-பீடியா இணையதளம் முடக்கம்!

Report

சீனாவில் விக்கி-பீடியா இணையதளத்தின் அனைத்து மொழி பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விக்கிலீக்ஸ் நிறுவனம், சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே விக்கிபீடியா பக்கங்கள் முடக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது, அனைத்து மொழி சார்ந்த விக்கிபிடியா பக்கங்களும் அங்கு முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சீனா தரப்பில் எந்த நோட்டீஸும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே விக்கிபீடியா பக்கங்கள் பயன்படுத்த முடியா வண்ணம் இருந்த நிலையில் தற்போது அனைத்து மொழி சார்ந்த விக்கிபீடியா பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த ஆண்டு தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய இணையதளங்கள், சூதாட்டம், மதம், ஆபாசத் திரைப்படங்கள் என சுமார் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது.

முன்னதாக, சீனாவைப் பொறுத்தவரை சமூக வலைதளங்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களுக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வேபீடோ, வீ சேட் போன்றவை சீனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேபீடோ, வீ சேட் போன்ற சமூக ஊடகங்களும் அரசு நியமிக்கப்பட்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

863 total views