ஆரம்ப நிலை பாடசாலைகளில் ஹிஜாப் அணிய தடை - ஒஸ்திரியாவில் சட்ட மூலம் நிறைவேற்றம்!

Report

ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மூலம் ஒஸ்திரிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆளும் வலது சாரி அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்ட இந்த முன் மொழிவிற்கு நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆனால், யூதர்கள் அணியும் யார்முல்கே மற்றும் சீக்கியர்கள் அணியும் பட்கா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படவில்லை.

ஆளும் வலதுசாரி மக்கள் கட்சி மற்றும் வலதுசாரி சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் ஆதரவுடனேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

996 total views