போயிங் 737 MAX ரக விமான விபத்துக்களுக்கு காரணம்

Report

போயிங் 737 MAX ரக விமானங்களுக்கான பாவனை மென் பொருளின் வடிவமைப்பில் கோளாறு இருந்ததை அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

விமானிகளுக்குப் பயிற்சி அளிக்க குறித்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, குறித்த பாவனை மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், பாவனை மென்பொருள் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கும் கூடுதல் விவரங்களை போயிங் நிறுவனம் வழங்கியுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக இடம் பெற்ற விமான விபத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

7209 total views