நேபாள தலைநகர் காத்மண்டுவில் தொடர் குண்டுவெடிப்பு

Report

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 4 பேர் உயிரிழந்தனர்.

நேபாள தலைநகரான காத்மண்டுவில் நேற்று, மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.

சுகேதரா, கட்டிகுலோ மற்றும் நாக்துங்கா உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், காத்மண்டுவின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டதாக 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க நேபாள இராணுவம் மற்றும் ஆயுத மேந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இருப்பினும், இந்த சம்பவத்திற்கு, இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

3583 total views