ஆப்கானிஸ்தானில் தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

Report

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் இரண்டு தலிபான் தளபதிகள் உள்பட 15 தீவிரவாதிகளை அரச படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாத குழுக்களின் ஆதிக்கம் அண்மைக் காலமாக மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது.

தீவிரவாதிகள் மீது கருணை காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாட்டின் ராணுவம் மற்றும் பொலிஸாரைக் கொண்ட கூட்டுப்படைகளுக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி உத்தரவிட்டுள்ளார்.

இந்த படைகளுக்கு உதவியாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் வான் வழியாக சென்று தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கந்தஹார் மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள காக்ரிஸ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூட்டுப் படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் குலாம் மற்றும் முஸ்தபா என்ற இரண்டு தலிபான் தளபதிகள் உள்பட 15 பயங்கரவாதிகளை அரச படையினர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

512 total views