காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்தில் 30-பேர் பலி!

Report

ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ஏரி ஒன்றை கடக்க முற்பட்டபோது படகு விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் பயணம் செய்த ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் மேயர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு நடந்த இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிஓ வெம்பா, ஏஎப்பி உள்ளிட்ட பத்திரிகை தெரிவித்த விவரம் இதோ.

காங்கோவிலிருந்து ஏராளமான பயணிகளையும் சரக்குகளையும் அளவுக்கு மீறீ ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த படகில் 350 பேர் ஏற்றிச் சென்றுள்ளனர். இதில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ளது. இதுவரை 30 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் 12 பெண்கள், 11 குழந்தைகள் மற்றும் 7 ஆண்கள்.

இந்த எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சபடுகிறது.

561 total views