தொலைக்காட்சிக்கான இலவச உரிமம் வேண்டும் பெற 249,000 பொது மக்கள் மனு!

Report

தொலைக்காட்சிக்கான இலவச உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தி 249,000 பொதுமக்கள் கையெழுத்திட்ட மனு பிபிசி தலைமைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.

75 வயதுக்கு மேற்பட்டவர்களும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொலைக்காட்சி உரிமத்துக்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் பிபிசி நிறுவனத் தலைவர் டேவிட் கிளெமென்ரி (David Clementi) தெரிவித்த்திருந்தார்.

பிபிசியின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து 249,000 பொதுமக்கள் கையெழுத்திட்ட மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பிளாக் பூல் (Blackpool) நகரில் “தொலைக்காட்சி இலவச உரிமத்தினைப் பாதுகாக்கவேண்டும் என்ற வாசகத்தினைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிபிசியின் இந்தமுடிவு மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் வேறு செலவுகளைக் குறைப்பதன் மூலம் இலவச உரிமத்தின் வழங்க முடியும் என்றும் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைக்கான போட்டியாளர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

தலைமைக்கான மற்றொரு போட்டியாளர் மைக்கல் கோவ் கூறுகையில், ஓய்வூதியம் பெறுகின்றவர்களிடம் தொலைக்காட்சி உரிமத்துக்கான கட்டணம் பெறுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளார்

கொன்சர்வேற்றிவ் தலைமைக்கான போட்டியாளரும் பிபிசி தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சித் தொகுப்பாளருமான எஸ்தர் மக்வே கூறுகையில், தான் பிரதமரானால் அனைவருக்கும் தொலைக்காட்சிக்கான இலவச உரிமம் வழங்குவேன் என்று உறுதியளித்துள்ளார்.

கொன்சர்வேற்றிவ் தலைமைக்கான போட்டியாளர்களில் ஆறுபேர் பிபிசியின் இந்தமுடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

1245 total views