மக்கள் எதிர்ப்பினால் விடுதலை செய்யப்பட்ட ரஷ்ய செய்தியாளர்!

Report

போதைப் பொருள் கைமாற்றல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ரஷ்ய செய்தியாளர் மீதான குற்றச்சாட்டுகள் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நீக்கப்பட்டதுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

36 வயதான சுயாதீன செய்தியாளரான கொலுனோவ், லாட்வியாவை தளமாக கொண்ட செய்தி இணையத்தளமான மெடுஷா உள்ளிட்ட சில ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

குறித்த செய்தித் தளம் ரஷ்யாவின் லென்டா.ரூ ஊடகவியலாளர்களால் ஸதாபிக்கப்பட்டு இயக்கப்படடு வருகின்றது.

புதிய கிரெம்ளின் ஆதரவு உரிமையாளரால் கையகப்படுத்திய பின் வெளிநாட்டில் உரிமையாளரைக் கொண்ட இணையத்தளமாக அது மாறியது.

ரஷ்ய பத்திரிகைகள் ஓர் அரிய பொது வெளியில் இவன் கொலுனோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அணிதிரண்டன.

இந்தநிலையில், கொலுனோவ் பொலிஸ் நிலையத்தில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்ட நிலையில் கண்ணீர் மல்க வெளியேறினார்.

அதேவேளை, தனது புலனாய்வு ஊடகவியலாளர் பணியை தொடர்ந்தும் மேற்கொள்ள அவர் தயாராகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

1178 total views