ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி விமான நிலையத்தில் தாக்குதல்: பொதுமக்கள் 26 பேர் படுகாயம்!

Report

ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையத்தைத் தாக்கியதில் பொது மக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து சவுதி பத்திரிகை தரப்பில், சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான நிலையத்தில் நேற்று ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

இதில், 18 பேருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். இன்னும் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

1186 total views