உலகின் விலை உயர்ந்த ஓவியம்! இப்போ யாரிடம் இருக்குனு தெரிஞ்ச ஷாக் ஆயிடுவீங்க

Report

உலகின் விலை உயர்ந்த ஓவியம் சவுதி பட்டத்து இளவரசரிடம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியனார்டோ டா வின்சி வரைந்த சல்வட்டோர் முண்டி என்ற ஓவியம் 2017ஆம் ஆண்டு 450 மில்லியன் டொலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, குறித்த ஓவியம் எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் மர்மமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், குறித்த மர்மத்தைத் தீர்க்கும் வகையில் லண்டனிலுள்ள ஓவிய விற்பனையாளர் ஒருவர் ஓவியத்தின் இருப்பிடம் பற்றி தகவல வெளியிட்டுள்ளார்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சொகுசுப் படகில் அது வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சல்வட்டோர் முண்டி ஓவியம் லியனார்டோ டா வின்சியின் கைவண்ணத்தில் உருவான மிகச் சிறந்த ஓவியங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

இருளில் இருந்து யேசுநாதர் தோன்றவதைப் போல் அதில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை, குறித்த ஓவியம் தொடர்பான சர்ச்சையும் நிலவிவருகிறது.

அதனை லியனார்டோ டா வின்சி வரையவில்லை எனவும், அவரது ஓவியப் பட்டறையில் பயின்ற மாணவர் ஒருவரே வரைந்ததாகவும் கூறப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

1903 total views